• vilasalnews@gmail.com

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

  • Share on

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி தூத்துக்குடியில் நடைபெற்றது.

கடந்த ( 31.1.2021 ) ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து, உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியை, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

இப்போட்டியில்,  500 க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில், கனிஷ்கா சிலம்பாட்ட பயிற்சி கழகம் முதலிடத்தையும்,  தமிழன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி இரண்டாமிடத்தையும், மூன்றாம் இடத்தை ஏபிஜே தமிழர் சிலம்பாட்ட கழகமும், நான்காம் இடத்தை புரூஸ் லீ மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியும், ஐந்தாம் இடத்தை O2 ஸ்போர்ட்ஸ் அகடமியும், ஆறாம் இடத்தை G.M.A சிலம்பம் அகடமியும்  பெற்றன. 

வெற்றி பெற்ற சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகளுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பி எம் சி மெட்ரிக் பள்ளியின் செயலாளர்  ஜான் கென்னடி, சங்கத்தின் மூத்த ஆசான் கதிரேசன் கார்த்திக் ராஜ், ராஜசேகர், மணிகண்டன் முத்துச்செல்வம் உலக சிலம்ப விளையாட்டு சங்கத்தின் செயலாளர் மணி கணேஷ் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கி வாழ்த்தினர்.

  • Share on

திருச்செந்தூர் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம் - சாலை மறியல்

  • Share on