சாத்தான்குளத்தில் புதியதாக விளையாட்டு மைதானம் ஊருவாக்க ஊர்வசி.அமிர்தராஜ் எம்எல்ஏ ரூ 2 லட்சம், அவரது சொந்த நிதியில் வழங்கினார்.
சாத்தான்குளம் காமராஜ் நகரில் 5 ஏக்கர் பரப்பளவில் புதியதாக விளையாட்டு மைதானம் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டு, அதில், தொகுதி இளைஞர்கள், தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு காவல் பணிக்கு செல்லும் போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சி செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ உதவிட வேண்டும் என தொகுதி இளைஞர்கள் மற்றும் நேதாஜி ஸ்போட்ஸ் கிளப் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்ற ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, தனது சொந்த நிதியில் ரூ.2 லட்சம் வழங்கினார். அதனை சாத்தான்குளம் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி மாணிக்க ராஜா, பொருளாளர் ஜூட்ஸ், செயலர் நடராஜன், வெற்றி வேல் மற்றும் உறுப்பினர்கள் கோபி, இம்ரான் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.