மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தகென்னடி மேற்பார்வையில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் அனிதா தலைமையில் சார்பு ஆய்வாளர் சண்முகராஜ் மற்றும் போலீசார் கடந்த 05.07.2024 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட JJ நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் திருநெல்வேலி ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த லூர்துராஜா மகன் ஜோசப் டேனியல் (23) மற்றும் தூத்துக்குடி உடன்குடி தங்கநகரம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் மகன் ஜெபக்குமார் (25) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் ஜோசப் டேனியல் மற்றும் ஜெபக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 95 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.