இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் நினைவுத்தூண் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளம் அழகுமுத்து அரி கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக யாதவ மகாசபை நிறுவனத் தலைவர் ராஜ கண்ணப்பன் கலந்துகொண்டு நினைவுத்தூண் மற்றும் அங்கு நிறுவப்பட்டிருந்த கல்வெட்டை திறந்து வைத்து சுபாஷ் சேர்வை யாதவ் எழுதிய பாஞ்சாலங்குறிச்சியில் குமார அழகுமுத்து என்ற நூலை வெளியிட்டு சிறப்பித்தார்.
விழாவில், அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்கள் மீனாதேவி, சின்னத்துரைச்சி, ராஜராஜேஸ்வரி, தமிழ் ஆசிரியர் செந்தில்குமார், அழகு முத்து கோன் பேரவை நிர்வாகிகள் வேல்ராஜ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.