ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் அரசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
அப்போது, புதியம்புத்தூர் கால்நடை உதவி மருத்துவர் கௌரிசங்கர் கலந்து கொண்டு விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் பற்றியும் அவற்றை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, விழிப்புணர்வின்போது நான் எனது வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ எவருக்கேனும் காய்ச்சல் இருந்தால் அவர்களை விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்க்கான லெப்டோஸ்பைரோஸிஸ், ஸ்கரப்டைபஸ் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கான பரிசோதனை செய்ய வலியுறுத்துவேன், நாய் பூனை போன்ற விலங்குகள் கடிக்கும் போது வெறி நாய் கடிக்கான தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி கொள்ளும்படி வலியுறுத்துவேன், விலங்குகளால் பரவும் நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவேன், விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவு நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் பொறுப்பு அபிலாஷா, இளம் பூச்சியியல் வல்லுநர் முருகேசன், மருத்துவ அலுவலர் ரேவதி, சுகாதார ஆய்வாளர் தேவசுந்தரம் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.