சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் ஐகோர்ட் மகராஜா (39). கூலித் தொழிலாளியான இவர் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனமுடைந்த தூக்குபோட்டுள்ளார்.
இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.