நாசரேத், செம்மறிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசரேத் மற்றும் செம்மறிக்குளம் துணை மின்நிலையத்தில், நாளை 06.07.2024 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்
மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, மூக்கப்பேறி, வெள்ளமடம், வாழையடி, உடையாா்குளம், பாட்டகரை, பிடாநோி, பிரகாசபுரம், வைத்தியலிங்கபுரம், அகப்பைகுளம், செம்பூர், வேலவன் காலனி, ஆதிநாதபுரம், மணல்குண்டு, எழுவரைமுக்கி, தோிப்பனை மெஞ்ஞானபுரம், அணைத்தலை, செம்மறிக்குளம், மருதூர்கரை, வாலிவிளை, தாய்விளை, தோப்பூர், கல்விளை, பிள்ளைவிளை இராமசாமிபுரம், லெட்சுமிபுரம், மாணிக்கப்புரம், இராம சுப்பிரமணியபுரம், நங்கைமொழி, வாகைவிளை, மானாடு, செட்டிவிளை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.