கோவில்பட்டியில் இன்று திடீரென பலத்த மழை பெய்ததால் கோடை வெப்பம் சற்று தனிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், மே மாதம் முடிந்தாலும் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து தான் வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கோவில்பட்டி பகுதியில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்த போதிலும், பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், சிறிது நேரத்தில் லேசான சாரல் மழையுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இதனால், கோவில்பட்டி நகர் மட்டுமின்றி, மந்திதோப்பு, மூப்பன் பட்டி நாலாட்டின்புதூர், இலுப்பையூரணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. திடீர் மழையால், கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.