• vilasalnews@gmail.com

காத்திருப்போர் பட்டியலில் தூத்துக்குடி காவல் ஆய்வாளர்... ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இரு காவலர்கள்!

  • Share on

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஐ.ஜி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா புகையிலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் இருந்து பண பேரம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு தென் மண்டல ஐ.ஜி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து  நடைபெற்ற விசாரணையடுத்து, மத்திய பாகம் காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஐ.ஜி. .கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்த சிவக்குமார் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வந்த சந்தனகுமார் ஆகிய இருவரும் ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கு பணி செய்து வந்த பாரதி நகரை சேர்ந்த சேகர் (40) என்பவரை முறைகேடாக மதுபானம் விற்பனை செய்ததாக கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை என்ற பெயரில் ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சிவக்குமார் மற்றும் சந்தனகுமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கும் மாற்றி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 27 துணை வட்டாட்சியர்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் கொன்று புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு!

  • Share on