• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கட்டுமான கழிவுகளை ரோட்டில் கொட்டிருந்தீங்கனா... மாநகராட்சி கொடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

  • Share on

தூத்துக்குடியில் கட்டுமான கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை கூறியிருப்பதாவது : 

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் அபிவிருத்தி மற்றும் புதிதாக கட்டிடம் கட்டும்போது ஏற்படக்கூடிய சேகரமாக கூடிய கட்டிட கழிவுகளை, முறையாக அப்புறப்படுத்தி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளான, ஆதிபராசக்தி நகர் பூங்கா திறவிடம், ரஹமத் நகர் ராம் நகர் பூங்கா திறவிடம், கதிர்வேல் நகர் பூங்கா பகுதிகள், அம்பேத்கார் நகர் திறவிடம், ஓம் சாந்தி நகர், மார்ட்டினா நகர், அய்யாசாமி காலனி திறவிடங்கள், மடத்தூர் ரோடு சந்திப்பு தாழ்வான பகுதிகள், தருவைகுளம் உரக்கடங்கு, தனசேகர் நகர் மேற்கு பகுதிகள், மாநகராட்சி பாளை ரோடு இடுகாடு வளாகம் ஆகிய பகுதிகளுக்கு கட்டிடக்கழிவுகளை கொட்டுவதற்காக பொதுமக்களின் வசதிக்காக இடங்கள் தேர்வு செய்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் பல்வேறு பகுதிகளில் கட்டிடக்கழிவுகள் ஆங்காங்கே குவியலாக குவிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பொது சுகாதாரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் கள ஆய்வின் போது நான்கு கட்டிடங்கள் கட்டுமான கழிவுகளை சாலையில் கொட்டி இடையூறு ஏற்படுத்திய செயல் கண்டறியப்பட்டு தலா ரூ.2000 வீதம் நான்கு கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.8000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, இனிவரும் காலங்களில் கட்டிடம் கட்டுவோர் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள முறையான இடங்களில் கட்டுமான கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் கட்டுமான விதி மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

  • Share on

வீரர் அழகுமுத்துக்கோனின் 314 வது ஜெயந்தி விழா - கட்டாலங்குளம் நினைவு மணி மண்டபத்திற்கு எஸ்பி நேரில் ஆய்வு

தூத்துக்குடியில் சுகாதாரத்திற்கு கேடு விளைக்கும் வகையில் பழைய பொருட்களை பயன்படுத்திய கேஎஃப்சி உணவகத்தின் உரிமம் ரத்து : உணவு பாதுகாப்புத்துறை அதிரடி

  • Share on