• vilasalnews@gmail.com

வீரர் அழகுமுத்துக்கோனின் 314 வது ஜெயந்தி விழா - கட்டாலங்குளம் நினைவு மணி மண்டபத்திற்கு எஸ்பி நேரில் ஆய்வு

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரர் அழகுமுத்துகோனின் 314வது பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் 11.07.2024 அன்று ஜெயந்தி விழா நடைபெற இருப்பதால், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் அவர்களின் நினைவு மணி மண்டபத்திற்கு நேற்று (04.07.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது,  தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எடிசன், கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி, தூத்துக்குடி போக்குவரத்துபிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடன் இருந்தனர்.

  • Share on

விளாத்திகுளம் அருகே தனி நபர் நில ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கரலிங்கபுரம் கிராம பெண்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் கட்டுமான கழிவுகளை ரோட்டில் கொட்டிருந்தீங்கனா... மாநகராட்சி கொடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

  • Share on