விளாத்திகுளம் அருகே உள்ள பட்டித்தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த அய்யாதுரை என்பவரின் மகன் மாரிமுத்து (55).
இவர் அழகாபுரி கோடங்கிபட்டியில் உள்ள தனியார் நூல் ஆலையில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்துள்ளார், இந்நிலையில், வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது அழகாபுரி வெம்பூர் இடையே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம் மாரிமுத்து மீது மோதியது.
இந்த விபத்தில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், இந்த விபத்து குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.