தூத்துக்குடியில் கோழி கறிக் கடையில் பணத்தை திருடிய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் மெயின் ரோட்டில் உள்ளது சிவதர்ஷிகா பிராய்லர் கடை. நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த கடையின் பூட்டை திறந்து ரொக்கப்பணம் 3500 ரூபாயை திருடி சென்று உள்ளார்கள். மேலும், கடந்த 15 நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் பழக்கடை ஒன்றிலும் திருட்டு சம்பவம் நடந்ததுள்ளது.
பழக்கடை திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மீண்டும் கோழிக்கறி கடையில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது வணிகர்கள், பொது மக்கள் மத்தியில் அச்சத்தினையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல் துறையினர்கள் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.