• vilasalnews@gmail.com

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

  • Share on

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இலவச பட்டா வழங்ககோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவித்தொகை வழங்கவும், தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வலியுறுத்தியும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்த இடத்திற்கு வருகை தந்த ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.


அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தாங்கள் கொண்டு  வந்த மனுவை வட்டாட்சியரிடம் அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் தகுதியுள்ள அனைவருக்கும் இலவச பட்டாவும், உதவித்தொகையும், மகளிர் உரிமை தொகையும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.

  • Share on

கோவில்பட்டி செய்தியாளருக்கு கொலை மிரட்டல் : சென்னை பிரஸ் கிளப் கடும் கண்டனம்!

தூத்துக்குடியில் கோழிக் கறி கடையில் திருட்டு : கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்!

  • Share on