• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே அனுமதியின்றி செம்மண் திருடிய 2 பேர் கைது - 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்!

  • Share on

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக லாரியில் செம்மண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு, 6 யூனிட் செம்மண் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் நேற்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேட்மாநகரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் செய்துங்கநல்லூர் கீழநட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் மகன் சுரேஷ் (35) மற்றும் முறப்பநாடு வடக்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சண்முகசுந்தரம் (21) ஆகிய இருவரும் மேற்படி டிப்பர் லாரிகளில் சட்டவிரோதமாக எவ்வித அனுமதியுமின்றி செம்மண் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  அந்தோணிராஜ் வழக்குபதிவு செய்து சுரேஷ் மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து, 3 யூனிட் செம்மண் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது!

கோவில்பட்டி செய்தியாளருக்கு கொலை மிரட்டல் : சென்னை பிரஸ் கிளப் கடும் கண்டனம்!

  • Share on