• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது!

  • Share on

தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட  2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (03.07.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோரீஸ்புரம் - மடத்தூர் சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி எஸ்.எம்.புரம் பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் சுகுமார்பாண்டி (20) மற்றும் தூத்துக்குடி கங்காபரமேஸ்வரி காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ்குமார் (24) என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார்  சுகுமார்பாண்டி மற்றும் மகேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம்!

தூத்துக்குடி அருகே அனுமதியின்றி செம்மண் திருடிய 2 பேர் கைது - 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்!

  • Share on