இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாள் விழா, கயத்தாறு வட்டம் கட்டாலங்குளத்தில் வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமை வகித்தார். டிஎஸ்பி வெங்கடேஷ், வட்டாட்சியர் சரவணப்பெருமாள், வீரர் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.