தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஒரு இளஞ்சிறார் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன் (எ) ஜெகன்ராஜ் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அதே போல், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் புவனேஷ்குமார் (20), திருநெல்வேலி பேரின்ப புரம் பகுதியை சேர்ந்த சேர்ந்த சாத்ரக் மகன் பிரவீன்ராஜா (23), இராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த முகமது ஈசாக் மகன் அப்துல்ரகுமான் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 01.07.2024 அன்று இரவு மற்றும் நேற்று முன்தினம் 02.07.2024 அதிகாலை தூத்துக்குடி வடபாகம், மத்தியபாகம் மற்றும் புதியம்புத்தூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன்நாயர் காலனியைச் சேர்ந்த முத்துவேல் மகன் இசக்கிமுத்து (எ) தொம்மை (26), தூத்துக்குடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஐயம்பெருமாள் மகன் சிவா (22), தூத்துக்குடி திரேஷ்புரம் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகன் சேதுராஜா (19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் ஆகியோரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.