பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் அமைதி பேரணி நடத்தப்பட்டு , அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் இன்று ( 3.2.2021 ) அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திமுகவினர் அமைதி பேரணியாக சென்று காய்கனி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு வந்தடைந்தனர்.
பின்னர் அங்குள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாநகர துணை செயலாளர் முருகேசன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.