• vilasalnews@gmail.com

எட்டையபுரத்தில் 3 மாதங்களுக்கு மேலாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விநியோகம் இல்லை - பொதுமக்கள் புகார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையபுரத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நியாய விலை கடைகளில் பருப்பு விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அங்குள்ள ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும், ரேஷன் கடைகளில் பருப்பு வழங்கப்படாத காரணத்தினால் மளிகைக்கடைகளில் 1 கிலோ துவரம் பருப்பு ரூ.280 வரை அதிக விலை கொடுத்து வாங்கி வருவதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள்,  பெரும்பாலான நேரங்களில் இங்குள்ள ரேஷன் கடையில் பாமாயில் விநியோகமும் சரியாக வழங்கப்படுவதில்லை என்கின்றனர்.

இதனால் எப்போதுதான் துவரம் பருப்பு வழங்கப்படும்? என்று நியாய விலை கடை விற்பனையாளரிடம் பொதுமக்கள் இன்று கேட்டதற்கு "தங்களது கடைக்கு துவரம் பருப்பு சப்ளை வரவே இல்லை என்றும், பாமாயிலும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வராமல் பாதி பாதியாகதான் வருகிறது என்றும், பருப்பு வந்தால்தான் தங்களால் கொடுக்க முடியும் என்றும் கூறும் ரேஷன் கடை ஊழியர், அதற்கு மேல் நீங்கள் எட்டயபுரம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் அப்பனசாமி-யிடம் போய் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று கூறுகிறாராம்

எட்டையபுரம் மட்டுமின்றி எட்டையபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு தமிழக அரசிடம் இருந்து நியாய விலை கடைகளின் மூலமாக வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆகவே,  எட்டையபுரம் பகுதி நியாய விலை கடைகளுக்கு போதுமான அளவு துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் உண்மையாகவே வரவில்லையா? அல்லது அதிகாரிகள், ரேஷன் கடை ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனரா என்பதை தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலர் உடனடியாக நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முறையாக நியாய விலை கடைகளில் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  • Share on

சாத்தான்குளம் வட்டார புதிய கல்வி அலுவலர்களுக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் வாழ்த்து!

கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

  • Share on