சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர்களாக ரம்யா, பாண்டியம்மாள் மற்றும் பீட்டர் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளதையொட்டி ஆசிரியர்கள் சங்கங்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர்களாக ரோஸ்லீன் ராஜம்மாள், ரம்யா, பாண்டியம்மாள் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இதில் முதல் நிலை வட்டார கல்வி அலுவலராக ரோஸ்லீன் ராஜம்மாள் பணிநிறைவு பெற்றதையடுத்து முதல் நிலை வட்டார கல்லி அலுவலராக ரம்யா, 2ஆம் நிலை வட்டார கல்வி அலுவலராக பாண்டியம்மாள், 3ஆம் நிலை வட்டார கல்வி அலுவலராக வேலூரில் இருந்து பதவி உயர்வு பெற்று வந்த பீட்டர் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள வட்டார கல்வி அலுவலர்களை தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற சாத்தான்குளம் வட்டாரத் தலைவர் ஸ்டேன்லிஜோயல், செயலாளர் ஜெபஸ்டீன், மாவட்டத் தலைவர் ஜாண்சன், மாவட்ட பொருளாளர் ஹர்பான்சிங் உள்ளிட்ட ஆசிரியர்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.