கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு முடிவின்படி அரசாணை 243-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், பதவி உயர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கு முடியும்வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வலியுறுத்தியும், கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 ஆசிரியைகள் உட்பட 53 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.