• vilasalnews@gmail.com

ஆதிச்சநல்லூர் 'சைட் மியூசியம்' - பார்வையிட திரளும் மாண, மாணவிகள்!

  • Share on

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டு  ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். ஆதிச்ச நல்லூரில் அகழாய்வு நடைபெற்ற குழிகளுக்கு மேல் கண்ணாடி தளம் அமைத்து, அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை அப்படியே வைத்து, அதனை பொது மக்கள் நேரடியாக பார்வையிடும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக ‘ஆன் சைட் மியூசியம்' அமைக்கப்பட்டது.


இந்த சைட் மியூசியத்தை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப் படுகின்றனர். சைட் மியூசியம் திறக்கப்பட்ட நாளில் இருந்து ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொல்லியல்மற்றும் வரலாற்று ஆய்வு மாணவர்கள் அதிகளவில் வருகை தந்து பார்வையிடுகின்றனர்.

இந்த நிலையில், இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிகள் 30 பேர் பள்ளி ஆசிரியர்களுடன் சேர்ந்து ஆதிச்சநல்லூரில் உருவாக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை காண வருகை தந்தனர்.

அவர்கள் ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியத்தை பார்வையிட்டனர். சைட் மியூசியம் குறித்து மத்திய தொல்லியல் துறை பணியாளர் வெங்கடேஷ் மாணவிகளுக்கு விளக்கமளித்தார். சைட் மியூசியத்தை மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு, அகழாய்வு குழிக்குள் உள்ள முதுமக்கள் தாழிகள் குறித்து அங்கிருந்த பணியாளரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.

  • Share on

ஆதிச்சநல்லூரில் 'சைட் மியூசியம்' - பார்வையிட திரளும் மாண, மாணவிகள்!

அக்கநாயக்கன்பட்டியில் புதிய தடுப்பணை : ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்!

  • Share on