மத்திய, மாநில நீதி வேண்டி அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிதம்பர நகர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து, கொண்டுவரப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களையும் புறக்கணித்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தமிழ்நாடு, உடல் உழைப்பு தொழிலாளர் சட்டத்தையும், அதன் கீழ் இயங்கும் 18 நலவாரியங்களையும் பிறதுறைகளில் இயங்கும் நல வாரியங்களையும்,பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் எனவும்,
விவசாயிகளுக்கும்,பொதுமக்களுக்கும் எதிரான வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும்,கட்டிட, உப்பள,மீனவ, சலவை,முடி திருத்துவோர் மற்றும் வீட்டு பணி பிற அமைப்பு சாரா தொழிலார்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக இன்று சிதம்பர நகர் பேருந்து நிலையம் முன்பு அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய,மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம் மாரிமுத்து, தென்மண்டல செயலாளர் கொம்பையா, தமிழ்நாடு முடித்திருத்தும் அழகுக்கலை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கம் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட செயலாளர் விஜயகுமார், வட்ட பொருளாளர் பாண்டி, மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் பேரவை, மாவட்ட தலைவர் குமாரலிங்கம், மகளிரணி செயலாளர் வெள்ளையம்மாள், தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு சுப்புலெட்சுமி,தமிழ் நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ராணி, ஜனநாயக மீனவர் மீன் சார்பு தொழிலாளர்கள் சங்கம் செல்லம்மாள், மற்றும் தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் பவ்யோலா மற்றும் சங்க மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.