தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகர் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் 25 சதவீதம் வழங்கப்பட்டு வந்ததை ஐந்து சதவீதமாக குறைத்ததனை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் வட்டத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் அன்னம்மாள், மாவட்ட பொருளாளர் தமிழரசன், வட்ட செயலாளர் திருமாலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.