திசையன்விளையில் இருந்து தட்டார்மடம், பொத்தகாலன் விளை வழியாக இரண்டு அரசு பேருந்துகள் இயக்கிட வேண்டும் என சாஸ்தாவிநல்லூர் விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் நெல்லை எம்பி , ராபர்ட் புரூஸை சந்தித்து கோரிகௌகை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க செயலரும், மாநில ஐஎன்டியுசி காங்கிரஸ் மாநில செயலர் லூர்துமணி தலைமையில், சங்கத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நல்லூர் விவசாய நல சங்க தலைவர் பெரியசாமி, சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்க செயற்குழுஉறுப்பினர் சந்தன திரவியம், உறுப்பினர் டால்வின் ஆகியோர் நெல்லை மக்களவை காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸை நேரில், அவர் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துடன், கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.
அந்த மனுவில், எங்கள் பகுதியின் நீர்வாழ்வாதாரமான வெள்ள நீர் கால்வாய்த் திட்டத்தில் இதுவரைக்கும் குறை பாடாக உள்ள கல்லிடைகுறிச்சி திம்மராஜபுரத்தில் உள்ள உயர் மட்டப்பாலம் எங்களுக்கு உரிமையான உபரி நீரான 3200 அன அடி தண்ணீர் வருமளவுக்கு மேம்பாலம் இல்லை. ஆகையால், திம்மராஜபுரத்தில் 3200 கன அடி தண்ணீர் வருமளவுக்கு மேம்பாலம் அமைத்திட போர்க்கால அடிப்படையில் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் .
மேலும், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம், போலையர்புரம், கொலுந்தட்டு, பொத்தல்காலன்விளை, முதலூர், முத்துக்கிருஷ்ணாபுரம், சாத்தான்குளம், கருங்கடல், பேய்க்குளம் வரை இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இந்த பேருந்தானது காலை 7.30 மற்றும் 10.30 நேரத்திலும் இயக்கினால் பள்ளி, கல்லூரி , மாணவ, மாணவிகள் பெரிதும் பயனடைவார்கள். ஆகையால் புதிய பேருந்துக்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்ற எம்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக உறுதி அளித்தார்.