• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் வடக்கு தெரு தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கொடை விழா!

  • Share on

சாத்தான்குளம் வடக்கு தெரு தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வடக்கு தெரு தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கொடை விழா ஐந்து நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில் முதல் நாள் அழகம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று காலையும் மாலையும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோயில் வளாகத்தில் முளைப்பாரியை வைத்து அப்பகுதி பெண்கள் கும்மி அடித்து சுவாமியை வழிபட்டனர் .


பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சுவாமிகள் தலையில் கும்பம் எடுத்து அப்பகுதி பெண்களும் தலையில் முளைப்பாரியை வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று நடனமாடி உற்சாகம் அடைந்தனர். பின்னர் கோயில் வளாகம் வந்தடைந்தது. இன்று சிறப்பு பூஜையும் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெறும் .கடைசி நாள் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜையும் இரவு பூக்குழி திருவிழாவும் நடைபெறும். இதில் சுற்று வட்டார கிராம மக்கள்  கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர்.

  • Share on

தோட்டத்திற்குள் புகுந்து கோழிகளை திருடிய வாலிபர் கைது!

இந்திய சுதந்திர போராட்டம் வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்!

  • Share on