மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்து கோழிகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
மெஞ்ஞானபுரம் விஜயநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த மாறபெருமாள் மகன் ராமலிங்கம் (42) என்பவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் கோழிகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16.06.2024 அன்று அந்த தோட்டத்திற்குள் புகுந்த மர்மநபர் 20 கோழிகளை திருடிச்சென்றுள்ளார்.
இதுகுறித்து இராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் காவல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மெஞ்ஞானபுரம் குமாரலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ஜெகன் (22) என்பவர் மேற்படி இராமலிங்கத்தின் தோட்டத்திற்குள் புகுந்து கோழிகளை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகராஜ் வழக்கு பதிவு செய்து ஜெகனை கைது செய்து, அவரிடமிருந்த ரூபாய் 4000 பணத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.