பணியின் போது வீர மரணமடைந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு படத்திற்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் பாலு நேற்று கொலை செய்யப்பட்டார். இன்று அவருக்கு 02.02ம்2021 (செவ்வாய்கிழமை) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் அவரது ஆத்மா சாந்தியடைய 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தி அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை ஆய்வாளர் ஜாகீர் உசேன், காவல் கட்டுபாட்டு அறை ஆய்வாளர் ஏழுமலை, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் தேவி, காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் சுப்பையா, சிவஞானமூர்த்தி, சங்கரன், கண்காணிப்பாளர்கள் கணேச பெருமாள், மயில்குமார், மாரியப்பன், மாரிமுத்து, அருணாசலம், ராபர்ட், நம்பிராஜன், மாவட்ட குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் ஊர்காவல் பெருமாள், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி பலர் கலந்து கொண்டனர்.