• vilasalnews@gmail.com

இதென்ன புது வில்லங்கம்... விளாத்திகுளம் ஜமாபந்தியில் மனு கொடுத்தவருக்கு கிடைத்த ஷாக் பதில்!

  • Share on

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியின் போது, இறந்து போனவரின் பெயரில் உள்ள பட்டாவை அவரது வாரிசு பெயருக்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்தவருக்கு மீண்டும் இறந்து போனவரின் பெயரிலேயே பட்டா வழங்கிய அவல சம்பவம் வருவாய் துறையில் அரங்கேறியுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்குட்பட்ட விளாத்திகுளம் தாலுகா வௌவ்வால்தொத்தி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மனைவி அழகம்மாள். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி இறந்துவிட்டார். இவரது பெயரில் ஒரு ஏக்கர் 81 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவரது மகள்களான அன்னலட்சுமி, சரஸ்வதி, குப்பம்மாள் ஆகியோர் சார்பில் வாரிசுச்சான்று சமர்பித்து பட்டா வழங்கும்படி விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பட்டா மாறுதலுக்காக ஆன்லைன் மூலம் பதிவு ஏற்றப்பட்டது. இதனையடுத்து, நேற்று பட்டா மாறுதல் செய்யப்பட்டு விட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து, பட்டாவை பதிவு இறக்கம் செய்து பார்த்தபோது, முன்பு இருந்த இறந்து போன அழகம்மாளின் பெயருக்கே மீண்டும் பட்டா வழங்கி ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 


இந்த நிலையில், விளாத்திகுளம் தாலுகா மண்டல துணை தாசில்தார் சங்கரநாராயணன் வேண்டும் என்றே அதே பெயருக்க பட்டா வழங்கி இருப்பதாக அயன்வடமலாபுரம் கரிசல்பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் என்பவர் கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாயிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார்.

இறந்து போனவரின் வாரிசு பெயருக்கு பட்டா மாறுதல் கேட்டு விளாத்திகுளம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தவருக்கு மீண்டும் இறந்தவரின் பெயரிலே பட்டா வழங்கிய விவகாரம் வருவாய்த்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் 3.5 கிலோ கஞ்சாவோடு இளைஞர் கைது!

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கம்!

  • Share on