• vilasalnews@gmail.com

புதியம்புத்தூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்!

  • Share on

புதியம்புத்தூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு டிஎஸ்பி தலைமையில் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் வரும் ஜூலை  9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோவில் கொடை விழா நடைபெறுகிறது. மேலும் புதியம்புத்தூரில் அனைத்து சமுதாயத்தினரும் ஒரே நேரத்தில் கோவில் கொடை விழா கொண்டாடுகின்றனர். 

ஜூலை 8 முதல் ஜூலை 14 வரை சாமி நகர்வலம் வருதல், முளைப்பாரி ஊர்வலம்  மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதனால் புதியம்புத்தூர் களைகட்டி காணப்படும். இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர் தலைமையில் ஆலோசனை கூட்டம் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் வைத்து இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஊர் முக்கிய பெரியோர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோவில் கொடை விழாவை எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி சிறப்பான முறையில் கொண்டாடுவது குறித்தும், காவல்துறை  சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில், புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மாணிக்கராஜ், சீதாராமன், இசக்கியப்பன் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பாலன் தனிப்பிரிவு ஏட்டு விக்னேஷ் மற்றும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே அரசு பேருந்து மோதி பெண் காயம் - போலீசார் விசாரணை!

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் 3.5 கிலோ கஞ்சாவோடு இளைஞர் கைது!

  • Share on