ஓட்டப்பிடாரம் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் காயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் மனைவி மாடத்தி (55) என்பவர் கடந்த இரு வருடங்களாக புதியம்புத்தூர் சிவன் கோவில் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலையில் சிவன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே கடைக்கு சென்று விட்டு சாலையோரமாக சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடியில் இருந்து கச்சேரி தளவாய்புரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த 55 D அரசு நகரப் பேருந்து எதிர்பாராத விதமாக மாடத்தி மீது மோதியது.
மேலும் மாடத்தையும் இடது பக்க கணுக்காலில் ஏறி இறங்கியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் காயமடைந்த மாடத்தியை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் அரசு பேருந்து டிரைவரான தூத்துக்குடி ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (51) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.