• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் அந்தந்த கோட்டத்துக்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. 

அதன் படி, இன்று திருச்செந்தூர் கோட்ட அலுவலகத்தில் மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்ட மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ( பொறுப்பு) ரெமோனா கலந்துகொண்டு, மின்நுகர்வோர்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அவல் அறிவுறுத்தினார்.


இந்த முகாமில், திருச்செந்தூர் மின்  விநியோக செயற் பொறியாளர் விஜய சங்கர பாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயக்குமார், ராம்மோகன், பேச்சிமுத்து, சாய்ஹரி கிருஷ்ணன், கணேசன், திருச்செந்தூர் மின் உதவி பொறியாளர்  முத்துராமன் மற்றும் திருச்செந்தூர் கோட்டத்துக்குட்பட்ட அனைத்து உதவி மின் பொறியாளர்கள்  கலந்து கொண்டனர்.

  • Share on

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேரலாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்!

ஓட்டப்பிடாரம் அருகே அரசு பேருந்து மோதி பெண் காயம் - போலீசார் விசாரணை!

  • Share on