தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதில், திமுக வட்ட செயலாளர் பிரசாந்த், சண்முகபுரம் ஊர் தலைவர் சக்திவேல், மத்திய வியாபாரிகள் சங்கம் இணை செயலாளர் தெர்மல் ராஜா, ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் தவசி வேல், ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க செயலாளர் அர்ஜுனன், ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்கம் சின்ன தங்கம், சவேரியார்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல் முருகன், முத்தையாபுரம் வியாபாரிகள் சங்க செயலாளர் மணிராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காளி, தமிழர் விடியல் கட்சி சந்தனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.