• vilasalnews@gmail.com

தலையில் முக்காடு அணிந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் அய்யலுச்சாமி தலைமையில் விவசாயிகள் 2023 - 24 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையினை உடனடியாக வழங்கிட கோரி துண்டால் தலையில் முக்காடு அணிந்து கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த மிக அதிக கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்ட உளுந்து, பாசி, மக்காச்சோளம், மிளகாய், உள்ளி, கம்பு உள்ளிட்ட பயிர்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியது

மழை நிவாரணத் தொகையாக ஒரு சில பகுதிகளுக்கு ஹெக்டேருக்கு 8,500 மட்டும் வழங்கியும் மாவட்டத்தில் ஒரு பகுதிக்கு ரேஷன் கார்டுக்கு 6000-ம் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிக்கு ரூபாய் 1000 தமிழக அரசு வழங்கியது.

இதில் கடும் மழையால் கயத்தாறு தாலுகாவில் கடம்பூர், சிதம்பராபுரம், கோடங்கால், குப்பணாபுரம், ஒட்டன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அனைத்து பயிர்களும்  மழை வெள்ளத்தில் மூழ்கி முளைத்து வீணாகியது. இதற்கான 2023- 24 க்கான பயிர் காப்பீட்டுத் தொகையினை அரசு வழங்காமல் கால தாமதப்படுத்தி வருகிறது.


ஆகவே, 2023 - 24 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையினை உடனடியாக வழங்கிட கோரி துண்டால் தலையில் முக்காடு அணிந்து கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்  கோட்டாட்சியரிடம் இது தொடர்பான மனுவினையும் வழங்கினர்.

  • Share on

பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழா - கால் நாட்டுடன் தொடங்கியது!

விளாத்திகுளம் அருகே குடிநீருக்காக திண்டாடும் மக்கள்... ஜல் ஜீவன் திட்டத்தில் மோசடி? ஒப்பந்ததாரர்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

  • Share on