ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி தூத்துக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர் மழையால் பாதிக்கபட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும், 2018 2019 2019 2020 ஆண்டுகளில் நிலுவையில் உள்ள பயிர்காப்பீட்டுத் தொகையை வழங்க கோரியும், இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் காப்பீடு தொகை வழங்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் தி.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் நம்பிராஜன், ஒன்றிய தலைவர்கள் தூத்துக்குடி சங்கரன், கருங்குளம் சின்னதுரை, திருவை ராமசந்திரன், பொட்டலூரணி செந்தட்டியா பிள்ளை, கட்டுமான சங்க செயலாளர் சொ.மாரியப்பன், சிபிஎம் கருங்குளம் ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொன்டனர்.