• vilasalnews@gmail.com

பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழா - கால் நாட்டுடன் தொடங்கியது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த கோவிலில் ஆனித்திருவிழா வருடம் தோறும் மிகவும் சிறப்பாக நடைபெறும். முத்துமாலையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். 


இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா இன்று கால்நாட்டுடன் தொடங்கியது. கால்நாட்டு விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் உள்ளே உள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து, கோவில் முன்பு கால்நாட்டு விழா நடந்தது. இதற்காக காலுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கால் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

இந்த திருவிழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வு ஜூலை 16ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் மாவிளக்கு வைத்தல், மரக்கட்டைகளால் செய்யப்பட்ட கை, கால்கள் ஆகியவைகளை நேர்ச்சையாக செலுத்துவார்கள். இதில் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

  • Share on

தூத்துக்குடியில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் லட்சுமிபதி தகவல்!

தலையில் முக்காடு அணிந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

  • Share on