தூத்துக்குடியில் வருகிற ஜூலை 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜூலை மாதம் முதல் வெள்ளிக்கிழமை 5.07.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பதிவு செய்த ஊர்த்தலைவர்கள், மீனவர்கள் அனைவருக்கும் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.
அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.