100 நாள் வேலையில் முழுமையான சம்பளம் வழங்க வலியுறுத்தி கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையில் முழுமையான சம்பளமான ரூ.319-யை வழங்க வலியுறுத்தியும், 100 நாள் பணி நிரந்தரமாக அனைவருக்கும் வழங்க வலியுறுத்தியும், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிந்திரன் தலைமை வகித்தார். இதில், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட பொட்டலூரணி, தெய்வச்செயல்புரம், செய்துங்கநல்லூர், வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.