தூத்துக்குடியில் இளைஞர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
தூத்துக்குடி கிப்சன் புரத்தைச் சேர்ந்தவர் இளங்கோ மகன் அழகு வேல்ராஜா (45). இவர், தனது குடும்பச் செலவுக்காக ரூ.6 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம்.
ஆனால், அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லையாம். இதனால், கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுக்கவே மனவேதனை அடைந்த அழகுவேல் ராஜா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மத்தியபாகம் காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.