சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் மேல வெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜாஸ்மின் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஞான ரதி வனிதா அனைவரையும் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் நந்தகோபால் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இம்முகாமில், வெள்ள மடம் மற்றும் வால சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு 320 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.