தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டித்தர வேண்டும் என்று அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்து, நெடுங்குளம் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுங்குளம் கிராமத்தில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட கலையரங்கம் திறப்புவிழா நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் கலந்து கொண்டு புதிய கலையரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஒப்பந்ததாரர் மங்களராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி மயில்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் மாரீஸ்வரி வேல்முருகன், ஊர்த்தலைவர் பரமசிவம், கணக்காளர் தங்க மாரியப்பன், பட்டாணி உள்ளிட்ட திரளான கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.