• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் அருகே 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மயில் மீட்பு!

  • Share on

சாத்தான்குளம் அருகே 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மயிலை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் மீட்டனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள போலையர் புரம் தீர்க்கத்தரிசி என்பவரது  தோட்டத்தில் உள்ள 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து வெளியேற முடியாமல் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த  போலையர்புரம்  ஞானசேகர்  சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினருக்கு  தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில்  நிலைய அலுவலர் இசக்கி ,  தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமார், தவசி ராஜ், சுரேஷ்குமார், பிரவீன் சாமுவேல், வைகுண்டம் ஆகியோர் விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை மீட்டனர். பின்னர் மயிலுக்கு  உரிய சிகிச்சை அளித்து அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் விட்டனர்.

  • Share on

பசுவந்தனை அரசு மருத்துவமனை முன்பு ஆபத்தான நிலையில் மின்கம்பம் - அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

நெடுங்குளம் கிராமத்தில் புதிய கலையரங்கம் - விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் திறந்து வைத்தார்!

  • Share on