• vilasalnews@gmail.com

தூத்துக்குடி : அரசு ஊழியர்கள் தொடர் மறியல் - சிறை நிரப்பும் போரட்டம்

  • Share on

தூத்துக்குடியில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சார்பில் தொடர் மறியல், சிறை நிரப்பும் போரட்டம் நடைபெற்றது.

நான்காரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் 3.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் ஆதிசேஷையா குழுவின் பரிந்துரையை ரத்து செய்ய வேண் டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.

ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அளித்த குற்ற குறிப்பாணைகளை ரத்துசெய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் தொடர் மறியல்‍ - சிறை நிரப்பும் போரட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற முதல் நாள் தொடர் மறியல் போராட்டத்திற்கு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தூர்ராஜன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் தேசி.முருகன் கோரிக்கை விளக்கவுரை யாற்றினார்.

மாநில துணைத்தலைவர் என்.வெங்கடேசன் நிறைவு றையாற்றி தொடர் மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து பேரனியாக சென்று பெரியார் சிலை முன்பு மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்கள் 165 பேர் உட்பட 212 பேர் போலீஸாரால் கைது செய்யபட்டனர்.

  • Share on

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஓய்வூதியர் சங்கம் போராட்டம்

ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • Share on