சாத்தான்குளம் முதலூரில் நடைபெற்ற திமுக கொடியேற்று விழாவில், மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பொன் முருகேசன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரித்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆலோசனையின் பெயரில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டும், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாகவும், சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் முதலூரில் திமுக கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன் தலைமை வகித்து திமுக கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார் . கிளைச் செயலாளர்கள் ஆசீர், ஞானசேகர், ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சாமுவேல், நிர்வாகிகள் ஜோசப் பொன்ராஜ், பொன்ராஜ், கணேஷ், சாலமோன், பீட்டர், மிகவேல், ராஜசிங் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.