கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சமாக பணம் பெறப்படுவதாக மதிமுக சார்பில் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து பத்திரப்பதிவு செய்வதற்கு ஏராளமான பொதுமக்கள் கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் வருகை தருகிறார்கள். அவர்களிடம் கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுவதாகவும், லஞ்சமாக பணம் பெறப்படுவதாகவும் கூறி, அதனைக் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் சார் பதிவாளர் அலுவலகத்தின் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
மதிமுக சார்பில் கோவில்பட்டி சார் பதிவு அலுவலகத்தை கண்டித்து வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.