கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக விழா நடைபெற்றது.
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், கவிதா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி செயலாளர் சுந்தரலிங்கம் தலைமை வகித்து மாணவர்கள் உயர்கல்வியில் உயர்ந்திட ஊக்கப்படுத்தினார். கல்லூரி இணைச்செயலாளர் காசியானந்தம் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் அருள்ராஜ் பொன்னுதுரை பேசுகையில், "கல்லூரியில் கொடுக்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று உற்சாகப்படுத்தினார்". கல்லூரி துணை முதல்வர் முனைவர் மகேஷ் குமார், கல்லூரியின் செயல்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
சிறப்பு விருந்தினராக, திரைப்பட இயக்குநர், கதை ஆசிரியர், எழுத்தாளர் கலைமாமணி தாமரை செந்தூர்பாண்டி கலந்துகொண்டு உயர்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, மாணவர்கள் சவால்களை சாதனையாக்கி வாழ்வை மெருகேற்றிட வாழ்த்தினார். கணிணித்துறை உதவிப்பேராசிரியர் ஜாஸ்மின் பொன்மேரி நன்றியுரை கூறினார். கணிணித்துறை உதவிப்பேராசிரியர், அகதா சித்ரா நிகழ்ச்யைத் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.