நாடு முழுவதும் இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டமானது வரும் 8ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்திற்கு, மூத்த வழக்கறிஞர்கள் கல்யாண் குமார், வில்லியன் பெலிக்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் சிவபாலன், சுப்பையா ஆகியோர் முன்னிலை வைத்தார். வழக்கறிஞர் வேணுகோபால் வரவேற்றார். இதில், வழக்கறிஞர்கள் முருகானந்தம், அந்தோணி, ரமேஷ் குமார், சுரேஷ் பவுன்ராஜ், சஷ்டி குமரன், முத்துராஜ், ராமச்சந்திரன், அழகு ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், ஈஸ்டர் கமல் அருண், பிரேம் குமார், வசந்த் ஸ்வீட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.