தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகுதியில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு ரேஷன் அரிசியை கடத்தி வந்த கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பாண்டி (27), கழுகுமலையை சேர்ந்த பாலமுருகன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.