தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு, கருப்புக் கொடி ஏற்றி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் ஏற்கனவே 2 கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் இங்கு புதிதாக கல்குவாரி அமைக்க கூடாது என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், குடியிருப்பு பகுதி அருகே கல்குவாரி அமைக்க முயற்சி நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, செட்டிகுறிச்சி பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு, கருப்புக் கொடி ஏற்றி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.